in ,

ஆடி அமாவாசை நிலக்கோட்டை அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசை நிலக்கோட்டை அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

 

ஆடி அமாவாசை முன்னிட்டு பரிகார ஸ்தலமான நிலக்கோட்டை அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்

தமிழகம் முழுவதும் இன்று ஆடி அமாவாசை தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு தங்களது சொந்த கிராமங்கள் மற்றும் பழமையான கோயில்களில் கூடி தர்ப்பணம் கொடுத்தும் வழிபாடு செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் வைகைக் கரையோரம் அமைந்துள்ள அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது.

இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இந்த கோயிலில் மாவட்டத்திலும் பல்வேறு ஊர்களில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், சூரிய பகவானை வழிபட்டும் வருகின்றனர். மேலும் இங்கு அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர்.

இந்த ஆடி அமாவாசை திருநாளை முன்னிட்டு வத்தலகுண்டு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நிலக்கோட்டை டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்ச தீபம் ஏற்றி மூலவரை வழிபட்டு வருகின்றனர்.

What do you think?

வத்தலகுண்டு அருகே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

கங்கவா படத்து…..கூட யாரும் போட்டி போட முடியாது …..இன்னு சொன்ன ஞானவேல் ராஜா….வை ட்ரோல் பண்ணி கலாய்க்கும் நெட்டிசன்கள்