திருச்சி மாவட்ட அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அடிப்படை பணியாளர்கள் நல சங்கம் நடத்தும் முப்பெரும் விழா
முசிறி தனியார் திருமண மண்டபத்தில் திருச்சி மாவட்ட அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அடிப்படை பணியாளர்கள் நல சங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 11 மாவட்டங்கள் இணைந்து மாநில சங்கத்துவக்க விழா மற்றும் மாநில சங்கத்தில் இணையும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது
இந்த விழாவிற்கு மாநில பொதுச் செயலாளர் சங்கர சபாபதி தலைமை வகித்தார் மாநில பொருளாளர் முருகன் மாநில மகளிர் அணி தலைவர் எஸ் ஆர் ராதா மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தனர் முத்துக்களை ஆசிரியர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார் மாவட்ட தலைவர் செந்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி மாவட்ட செயலாளர் பிரேம்குமார் மாநில செய்தி தொடர்பாளர் தாஸ் வாழ்த்துரை வழங்கினர்
கூட்டத்தில் 2020-21ம் ஆண்டு சமையலராக பணியில் சேர்ந்த நபர்களுக்கு உடனடியாக பணி வரன்முறையும் தகுதி கான் பருவமும் உடனடியாக செய்து தருமாறு மாநில ஆதிதிராவிடர் நல அலுவலர் கேட்டுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் செல்லப்பெருமாள் திலகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் திருச்சி மாவட்ட பொருளாளர் தீபன் ராஜ் நன்றி கூறினார்