in

அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் ஆடி பெருவிழா மூன்றாம் திருநாள் அனுமந்த வாகனத்தில் பவனி வந்த கள்ளழகர்

அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் ஆடி பெருவிழா மூன்றாம் திருநாள் அனுமந்த வாகனத்தில் பவனி வந்த கள்ளழகர்

உலக பிரசித்தி பெற்ற அழகர்கோவில் ஶ்ரீ கல்யாணசுந்தரவல்லி தாயார் சமேத ஶ்ரீ கள்ளழகர் திருக்கோவிலில் ஆடி பெருவிழாவை முன்னிட்டு மூன்றாம் திருநாளில் கள்ளழகர் அனுமந்த வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இவ்விழா கடந்த 13ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது விழாவின் மூன்றாம் திருநாளில் உற்சவர் கள்ளழகர் சர்வ அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோஷ்டி பாராயணம் நடைபெற்றன பின்னர் துளசியால் அர்ச்சனைகள் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் ஜடாரி பிரசாதம் வழங்கப்பட்டன இதனை அடுத்து மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் கள்ளழகர் பெருமாளை தோளில் சுமந்து பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அருள்பாலித்தார் அனுமந்த வாகனத்தில் பவனி வந்த கள்ளழகர் பெருமாளை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

What do you think?

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் ஆனி மாத திருக்கல்யாண உற்சவ விழா திரளான பக்தர்கள் தரிசனம்

பெரியகுளத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ.கௌமாரியம்மன் கோவில் திருவிழா