திருத்துறைப்பூண்டியில் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது நாடுமுழுவதும் 2010ம் ஆண்டு இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது தமிழக அரசு 2011ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தியது 2013ம் ஆண்டு முதல் இந்த திட்டம் தமிழகத்தில் அமலில் உள்ளது இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேர்பவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணமின்றி தனியார் பள்ளிகளில் இலவசமாகப் படிக்கலாம் இந்த நிலையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது அதன்படி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்கள் தேர்வுசெய்யும் பணிகள் நடைபெற்றது இதில் 1கி.மீ தொலைவில் வசிப்பவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்
இதில் திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் இலவச கட்டாய கல்வி திட்டத்தில் குலுக்கல் முறையில் மாணவர்கள் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் அறிவழகன் முன்னிலையில் குலுக்கல் முறையில் 23 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது .