in

சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி


Watch – YouTube Click

சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி

 

நடிகை சுகாசினியின் தந்தையும் நடிகர் கமலஹாசனின் அண்ணனும் ஆன சாருஹாசன் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் மோகன் நடிப்பில் வெளியான ஹாரா திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை மகள் சுகாசினி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு டாக்டர் மற்றும் நர்ஸ்கள் என் தந்தையை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் என் தந்தைக்கு இது விடுமுறையா? அல்லது மருத்துவமனையில் நோய்காக சிகிச்சை எடுக்கிறாரா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இவரின் பதிவை பார்த்த ராதிகா, குஷ்பு மற்றும் நடிகை கனிகா உங்கள் தந்தை விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் என்று ட்விட் செய்துள்ளனர்.

இவருக்கு தற்போது 93 வயதாகிறது.


Watch – YouTube Click

What do you think?

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் நடிகர் ஷாருக்கான்

ஊர்வசி ரவுத்தலா வீடியோ இணையத்தில் கசிந்தது