வாக்கு சாவடி மையங்களை ஆய்வு செய்த ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுரை
போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்..
போளூர் அடுத்த குருவிமலை அரசு நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் வகுப்பு அறைகளில் போதிய வெளிச்சத்திற்காக மின்விளக்கு வசதிகள் பொருத்த ஏற்பாடு செய்ய அறிவுரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து போளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்தார் அப்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் உள்ளிட்டவர்களை காலையிலேயே வந்து வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யும்படி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமகிருஷ்ணனிடம் அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் வெங்கடேசன், துணை வட்டாட்சியர் சிவலிங்கம், செயல் அலுவலர் முகமது ரிஸ்வான் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.