தின்னர் பாட்டிலுடன் வந்த மாற்றுத்திறனாளி ஆட்சியர் கோபத்துடன் அட்வைஸ்
மாவட்ட ஆட்சியரிடம் தின்னர் பாட்டிலுடன் வந்து மனு கொடுத்த மாற்றுத்திறனாளி…கொளுத்திக் கொண்டு சாவதற்காக எடுத்து வந்ததாக கூறிய நிலையில் ஆட்சியர் இந்த எண்ணத்துடன் மீண்டும் இங்கு வராதீர்கள் என்று கோபத்துடன் அட்வைஸ்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட கருப்பட்டிப் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் இவர் திருப்பூரில் டையிங் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 2019 ல் மூட்டு நொடித்தல் பிரச்சனை காரணமாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு அவருக்கு வலது பக்க கை கால் செயல்படவில்லை.இதுகுறித்து அவர் தஞ்சாவூர் மாவட்ட குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து இவருக்கு 75 சதவீதம் ஊனம் என மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்த நிலையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் அவருக்கு 2022 ல் பேட்டரி மூலம் இயங்கும் வீல் சேர் வழங்கப்பட்டுள்ளது.இந்த வீல் சேர் கடந்த 2023ல் வீட்டில் சார்ஜ் போட்டு இருந்தபோது தீப்பற்றி எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனைய டுத்து தனக்கு பெட்ரோல் ஸ்கூட்டி வழங்க வேண்டும் என்று செல்வகுமார் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு கொடுப்பதற்காக செல்வகுமார் வருகை தந்து மாற்று திறனாளிகளுக்கான இருக்கையில் அமர்ந்திருந்தார்.
இதனையடுத்து அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அங்கு காத்திருந்த மாற்றுத் திறனாளிகளிடம் மனுவினை வாங்கினார். அப்போது அவரிடம் மனு அளித்த செல்வகுமார் தொடர்ந்து தனது கைப்பையில் உள்ள தின்னர் பாட்டிலை எடுத்து எனக்கு வேறு வழி தெரியவில்லை அதனால் தின்னரை ஊற்றி கொளுத்திக் கொள்ளலாம் என்று தான் இங்கு வந்தேன் என்று ஆட்சியரிடம் கூறியதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக ஆட்சியரின் பாதுகாவலர் தின்னர் பாட்டிலை பிடுங்கி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து பெண் போலீசிடம் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து கோபமடைந்த ஆட்சியர் உங்களுக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது உங்களை தாண்டி பிரச்சினை உள்ளவர்கள் இருக்கிறார்கள்.மன்னென்னய் ஊற்றி கொளுத்திக் கொள்வது எதற்கும் முடிவாகாது.அதனால் இது போன்ற முடிவோடு இங்கு வரக்கூடாது.சட்ட விதிகளுக்கு உட்பட்டு உங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை அரசு செய்யும் என்று கூறி அனுப்பி வைத்தார்.