சர்வதேச அளவில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வரும் விளையாட்டான “அட்யா பட்யா” விளையாட்டு போட்டி தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவர்களுக்கு இடையே நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான கிளியான் தட்டு விளையாட்டு, ’அட்யா பட்யா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கோ- கோ மற்றும் கபடி கலந்த இந்த விளையாட்டை மாணவ, மாணவிகள் ஆர்வமாக விளையாடி வருகின்ற நிலையில் இந்த விளையாட்டில் சர்வதேச அளவில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியானது
அட்யா பட்யா அசோசியேஷன் மாவட்ட துணை செயலாலர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் மணி ஆகியோர் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினர்