சனியனுக்கு பயந்து காலனிடம் ஆட்சியை கொடுத்து போல்.. டி.டி.வி.தினகரன் விமர்சனம்.
திருவண்ணாமலை தனியார் தங்கும் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சி நிர்வாகிகளை இன்று சந்தித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தான் பல ஆண்டுகளாக அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருவதாகவும், தற்போது நாடாளுமன்ற தேர்தல் என்பதால் அண்ணாமலையாரை தரிசனம் செய்ததாகவும், இதனை தொடர்ந்து சேலத்திற்கு சென்று பாரத பிரதமர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பண பலம், ஆட்சி அதிகாரம், கூட்டணி கட்சியினரின் பலம் இருந்தும் அதிமுக தோல்வியை சந்தித்தது எனவும், அதிமுக செய்த முறைகேடுகள் மற்றும் ஊழல்களால் எடப்பாடி பழனிச்சாமி கம்பெனியை தமிழக மக்கள் அகற்றி உள்ளனர் என்றும், உப்பை தின்றவர் தண்ணீர் குடித்தது தான் ஆக வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பழனிசாமி செய்த தவறுக்கு மக்கள் தக்க தண்டனை தருவார்கள் எனவும், அதன் பிறகு அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்றும், பழனிச்சாமி என்கிற அசுரனின் வீழ்ச்சிக்குப் பிறகு அம்மாவின் ஆட்சி மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் நடைபெறும் என தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சி தமிழகத்தில் எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சனியனுக்கு பயந்து காலனிடம் ஆட்சியை கொடுத்தது போல் உள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் கொடுத்த திமுகவினர் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று இரண்டு மட்டுமே நிறைவேற்றி உள்ளதாகவும், 90% வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு அதனை நிறைவேற்றவில்லை எனவும், தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து உள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களை படிக்க அனுப்புவதற்கு கூட பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு அனுப்புவதாகவும், நடந்து முடிந்த சென்னை பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் தமிழகத்தில் உள்ள போதை பொருள் கலாச்சாரம் தன்னை உருத்துவதாகவும், ஆளுங்கட்சியினரின் துணையுடன் போதை மருந்து புழக்கத்தில் உள்ள விவகாரம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும், இது போன்ற பேச்சு அரசியலுக்காக பாரத பிரதமர் பேச வேண்டிய அவசியம் இல்லை எனவும், பல்வேறு இடங்களில் பாஜக ஆட்சியில் இருப்பதால் 370 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் எனவும், பத்தாண்டுகளாக ஊழல் இல்லாத வெளிப்படையாக இந்தியாவின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை கொடுத்திருப்பதால் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசு விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை எனவும், மீத்தேன் ஸ்டெர்லைட் ஆலைகள் உள்ளிட்டவற்றை தடை செய்து தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும் அதனை தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனவும், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற நல்லதொரு கூட்டணியை அமைத்துள்ளதாகவும், அதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளதாகவும், பாஜக ஆட்சி அமைக்க அணிலை போன்று தாங்கள் செயல்படுவோம் என்றும், குறிப்பாக பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கீடு செய்து இறுதியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்து தரலாம் என தெரிவித்துள்ளதாகவும், ஆனால் கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் தன்னிடம் தேர்தலில் நிற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், தமிழகத்தில் சிறந்த கூட்டணியை உருவாக்கி தீய சக்திகளையும் துரோக சக்திகளையும் வீழ்த்த வேண்டும் என தெரிவித்தார்.
பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது செய்த சாதனைகளை பார்த்து பொதுமக்கள் அவரை பிரதமராக ஆக்கினார்கள் எனவும், கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சி செய்து உலக தலைவர்கள் பாராட்டும் இடத்திற்கு பிரதர் மோடி வந்துள்ளார் எனவும், மேடையில் பிரதமர் தனது கருத்தை தெரிவித்தார் எனவும் குறிப்பாக தமிழக முதல்வர் தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார் எனவும், ஆனால் எவ்வித திட்டங்களையும் நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றுகிறாரோ அதேபோல் மத்திய அரசு வழங்கும் நிதியை வெளியில் தெரிவிக்காமல் மறைத்து வைத்துக் கொண்டு மீண்டும் நிதி வேண்டும் என தெரிவித்ததாகவும், தமிழக முதல்வரின் பொய்யான முகம் விரைவில் வெளிவரும் எனவும், 2024 மற்றும் 2026 தேர்தல்களில் தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும், போதை மருந்து புழக்கத்திற்கு ஆளுங்கட்சியின் ஆதரவோடு பழக்கம் ஏற்பட்டு வருவதாகவும் பிரதம மந்திரியை மேடையில் தெரிவித்துள்ளார் என அதற்கு முடிவு கட்டுவதற்கு மீண்டும் தமிழகத்தில் அமைதியான சூழல் உருவாவதற்கு திமுக ஆட்சியை விட்டு சென்றாலே போதும் என
தெரிவித்தார்.
மத்திய அரசின் சி.ஏ.ஏ திட்டத்திற்கு பதில் அளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இந்த திட்டம் அனைவருக்கும் சமமானது எனவும், பாகிஸ்தான், ஆஃப்காணிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் இந்தியாவில் தங்கினால் குடியுரிமை வழங்கப்படும் என்ற அடிப்படையில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டத்தால் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்ற நிலையே உள்ளதாகவும், இதனை ஏற்காத திமுக அரசு சிறுபான்மை இஸ்லாமிய மக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை பரப்பி ஓட்டு வங்கிக்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகளை சந்தித்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என ஆலோசனைகள் வழங்க உள்ளதாகவும், இன்று இரவு சேலத்தில் பாஜக நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாகவும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவது பற்றி இதுவரை ஆலோசனை செய்யவில்லை என எனவும் அவ்வாறு தான் போட்டியிடுவேன் என்றால் உடனடியாக ஊடகம் வாயிலாக அறிவிப்பேன் என செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.