10 நாட்களுக்குப் பிறகு நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்
மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக் கூடும் என்றும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது .
இதனால் கடந்த 9 தினங்களாக நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, கூத்தன் குழி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 10,000 நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் தற்பொழுது நெல்லை மாவட்டத்தில் மழை நின்று விட்டதாலும் காற்றின் வேகம் குறைவாக உள்ளதுனால் 1500 பைபர் படகுகள் மூலம் சுமார் 10,000 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கப் இன்று சென்றுள்ளனர்.