புதுச்சேரியில் தடைக்காலம் முடிந்து மீன்பிடித் தொழிலை மீனவர்கள் இன்று தொடங்கினர்
புதுச்சேரி, ஏனாம் மற்றும் காரைக்காலில் மீன் பிடி தடைக்காலம் ஏப் 15ம் தே துவங்கி இன்றுடன் முடிந்தது. நாட்டு படகு தவிர்த்து அனைத்து இயந்திர படகுகளிலும் சென்று மீன்பிடிக்க அரசு தடை இருந்தது.
தற்பொழுது தடைக்காலம் முடிவு இன்று அதிகாலை முதல் புதுச்சேரி,காரைக்கால் மற்றும் யானாத்தில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்..
தடைக்காலத்தில் படகுகளை ரிப்பேர் செய்தும் அனைத்து படகுகளிலும் தேசிய கொடி ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து படகுகளை மீனவர்கள் இயக்கத் துவங்கினர்.
புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் மற்றும் உப்பளம் துறைமுகத்திலுள்ள மீன்பிடி விசைப்படகுகளை புதுச்சேரி மீன்பிடி விசைப்படகுகளில் டீசல், ஐஸ் கட்டிகள், சமையலுக்கு தேவையான காய்கறிகள் ஆகியவற்றை ஏற்றி கொண்டு புறப்பட்டனர்.
64 நாள் தடைக்குப் பிறகு மீனவர்கள் ஆர்வத்துடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். முன்னதாக தடை கால நிவாரணமாக 18 ஆயிரத்து 298 மீனவர்களுக்கு தலா 6500 ரூபாய் அரசு சார்பில் வழங்கப்பட்டது.