in

கோடை விடுமுறை முடிந்த பின்னர் இன்று மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை


Watch – YouTube Click

கோடை விடுமுறை முடிந்த பின்னர் இன்று மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை

 

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்த பின்னர் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். மேலும் பள்ளிக்கு வருகை தந்த மாணவ – மாணவிகளை பூ, இனிப்புகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி ஆசிரியர்கள் உற்சாக வரவேற்றனர்.

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி பள்ளிகளில் ஆண்டுத்தேர்வுகள் முடிவடைந்து 29ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் புதுச்சேரியில் கடுமையான வெயில் காரணமாக கோடை விடுமுறையானது ஜூன் 11வரை நீடிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று முதல் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர். மேலும் அரசு பள்ளிகளில் மாணவ – மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் இனிப்பு மற்றும் பூக்கள் கொடுத்து வரவேற்றனர் தொடர்ந்து காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

மேலும் பள்ளி திறக்கும் இன்றைய நாளே மாணவர்களுக்கான சீருடை, புத்தகம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் சாரம் அரசு தொடக்கப் பள்ளியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவ மாணவிகளை வரவேற்று இனிப்பு மற்றும் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தனர்.

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்பி பாடத்திட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

இரு சக்கர வாகன திருடன் – சோதனையில் பிடித்து சிறையிலடைத்த காவல் துறையினர் – பொதுமக்கள் பாராட்டு

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் 20 நாட்களில் நிரம்பியது