மீண்டும் ராஷ்மிகா மந்தனா வீடியோ …..அதிர்ச்சியில் சினி வட்டாராம்
சேர்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், இந்த தொழில்நுட்பம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் அச்சபடுகிறனர்.
மேலும் மனிதர்கள் தற்போது பார்த்து வரும் பல்வேறு பணிகளுக்கு இது ஆபத்தை ஏற்படுத்த கூடும். இந்த தொழில்நுட்பதை பயன் படுத்தி பல தவறான வீடியோக்கள் வெளியாகிய நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து Deep Fake வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ராஷ்மிகா மந்தனா வீடியோவை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா, காஜல், Katerina போன்ற நடிகைகளின் வீடியோக்கள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஷ்மிகா மந்தனா வீடியோவை வெளியிட்ட அந்த இளைஞரை டெல்லி போலீசார் கைது செய்த நிலையில் மீண்டும் ரஷ்மிகா முகத்தோடு கவர்ச்சி நடனம் ஆடும் ஒரு பெண்ணின் உடலை பொருத்தி எடிட் செய்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஷ்மிகா மற்றும் சகநடிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.