in

சுயமரியாதையை பார்க்காமல் பாதிக்கப்பட்ட பெண்கள் உண்மையை சொல்லவேண்டும்…குஷ்பூ வேண்டுகோள்

சுயமரியாதையை பார்க்காமல் பாதிக்கப்பட்ட பெண்கள் உண்மையை சொல்லவேண்டும்…குஷ்பூ வேண்டுகோள்

 

ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாள திரை உலகம் ஆட்டம் காண அரம்பித்துவிட்டது.

அடுத்தடுத்து பல நடிகர்களின் பெயர் வெளியாகி மலையாள நடிகர்கள் உதறலில் இருக்க. இது தொடர்பாக முன்னாள் தேசிய மகளிர் ஆணைய தலைவரும் பாஜக உறுப்பினருமான குஷ்பூ கூறியதாவது இந்த துறையில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் பெண்களுக்கு அநீதி நடக்கிறது.

ஆண்களும் சில இடங்களில் பிரச்சனையை சந்திக்கிறார்கள் இது போன்ற விவகாரங்களை இன்று பேசுவதால் நாளை பேசுவது என்று யோசிக்காமல் உடனடியாக பேசினால் தான் அதற்கான சொல்யூஷன் கிடைக்கும்.

எனவே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்கள் ஆதரவாக நிற்க வேண்டும் பல பெண்களுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிடைக்காத நிலையில் பெண்களுக்கு எதிரான அத்துமமீறல்கள் நடக்கிறது.

எனவே பெண்கள் வெளியே வந்து தைரியமாக பேசுங்கள் கண்ணியம், சுயமரியாதை என்று சமரசம் செய்து கொள்ளாதீர்கள் நான் விழுந்தால் என்னை பிடிக்க வலிமையான கரம் ஒன்று இருக்கிறது என்று நான் கருதினேன் ஆனால் அந்த கரங்களே என்னை துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என் தந்தையால் நான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் என்பதை வெளியே சொல்வதற்கு எனக்கு பல வருடங்கள் ஆகி உள்ளது அதனால் பெண்கள் தைரியமாக வெளியில் வந்து தங்களது பிரச்சினையை கூற வேண்டும் என்று கூறியுள்ளார் என்று தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

What do you think?

மலையாள நடிகர் சங்கம் கலைக்கபட்டது

தொழில் முதலீடுகள் பெற்றதில் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் உண்மை நிலை தெரியவரும்- பாமக நிறுவனர் ராமதாஸ்