in

வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் பணியை புறக்கணித்து 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நியாய விலை கடை பணியாளர் மாலை 6 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று கைரேகை பதிவு செய்ய வற்புறுத்தப்படுவதால் இதில் பெண் பணியாளர்கள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள்.

எனவே இதற்கு உரிய விதிமுறைகளை பின்பற்ற அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகைக்கடன் ஏலம் விடப்பட்டு குறைவு தொகையை நட்டக் கணக்கிற்கு எடுத்துச் செல்ல சிசிபிக்கு ஒரு நடைமுறையும் பிஎஸ் சிசிஎஸ் க்கு ஒரு நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

இதனால் பணி ஓய்வு பெறும் செயலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். சங்கத்திற்கு எம்எஸ்சி ஏஐஎஃப் திட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய கட்டாயப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

பணியாளர்கள் பொது பணிநிலைத் திறனில் உள்ள குறைபாடுகளை நீக்கப்பட வேண்டும் பணியாளர்களின் ஊதிய ஒப்பந்தம் 31.03.2023 உடன் முடிவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முழுவதும் உள்ள 130 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பணியாளர்களும் 450 நியாய விலை கடை பணியாளர்களும் கதவடைப்பு செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வரும் 25.03.2024 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் தொடங்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

தேர்தல் பத்திர வழக்கு எஸ்பிஐ வங்கியின் மனு தள்ளுபடி

அரசுடமையாகும் நியோமேக்ஸ் சொத்துகள் ஐயோ பாவம் முதலீட்டாளர்கள்