in

சிதம்பரத்தில் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 260 பேரை அமரன் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்ற பள்ளி நிர்வாகம்

சிதம்பரத்தில் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 260 பேரை அமரன் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்ற பள்ளி நிர்வாகம். சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். ராணுவத்தின் பெருமையை போற்றும் வகையில் இருந்ததால் திரைப்படம் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டனர்

சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த அமரன் திரைப்படம் சமீபத்தில் திரையிடப்பட்டது. ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், ராணுவ வீரர்களின் கடின உழைப்பை பிரதிபலிக்கும் வகையிலும் இந்த படம் படமாக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவுகள் பெருகியது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் திரைப்படத்தை பார்த்து பாராட்டினர்.

இந்நிலையில் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்று பள்ளி மாணவ, மாணவிகளை அமரன் திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றது. சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள ஷெம்ஃபோர்டு ஆங்கில பள்ளியின் சார்பில் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 260 மாணவ, மாணவிகளை இன்று பள்ளி நிர்வாகத்தினர் அமரன் திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பள்ளியின் தாளாளர் ஹரிஹரன் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் இருந்து வேன் மூலம் பாதுகாப்பாக சிதம்பரம் நகரில் உள்ள லேனா தியேட்டருக்கு அழைத்து வந்தனர். திரைப்படத்திற்காக ஏற்கெனவே பள்ளி நிர்வாகத்தின் சார்பில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

மாணவர்கள் தியேட்டருக்கு சென்ற உடன், சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக் திரையரங்கிற்கு வந்தார். பின்னர் மாணவர்களிடையே கலந்துரையாடிய டிஎஸ்பி லாமேக், ராணுவத்தின் பெருமையையும், ராணுவ வீரர்களின் வீரத்தையும், பணிகளையும் பற்றி எடுத்துக்கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

இதையடுத்து மாணவர்கள் வரிசையாக தியேட்டருக்குள் சென்று அமர்ந்து படம் பார்த்தனர். அவர்களுக்கு உதவியாக பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர். திரைப்படம் முடிந்த பிறகு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீண்டும் வேன் மூலம் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

திரைப்படம் பார்த்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி மாணவர்கள்,

இந்த திரைப்படத்திற்கு அழைத்து வந்து காண்பித்த பள்ளி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேசப்பற்றை ஊற்றுகின்ற படமாக இருக்கிறது. இந்த பாடத்தை பார்க்கும்போது லேசான அழுகை வந்தது. திரைப்படத்தை பார்த்த பிறகு நாமும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணம் வந்தது. தேசப்பற்றை ஊட்டும் வகையில் உள்ளதால் அனைவரும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றனர்.

What do you think?

வேளாண் கல்லூரி மாணவர்கள் டிஜிட்டல் விவசாய கல்வி அறிவை பெற கட்டாயம்

கூத்தாண்டன் அருள்மிகு ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அம்மன் திருக்கோவில் கார்த்திகை சோமவார தினத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்