in

வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

 

ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு இருமடங்கு அபராதம் விதிப்பதை கண்டிப்பது நாகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்: திடீர் வேலை நிறுத்தத்தால் 127 கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் பொதுமக்கள் அவதி.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு இருமடங்கு அபராதம் விதிப்பதை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 127 கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரேஷன் கடைகளில் எடை குறைவாக இருந்தால், விற்பனையாளர் மீது இரு மடங்கு அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும், வெகு தொலைவில் உள்ள கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களை, அருகில் உள்ள கடைகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள், விற்பனையாளர், எடையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக விவசாயிகளுக்கு, விவசாய கடன், நகை , உரம் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பின்றி திடீர் வேலை நிறுத்த போராட்டத்தால் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் இருந்து காத்திருந்து திரும்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடி பொய்த்து போன நிலையில் ஒருபோக சம்பா சாகுபடி ஆவது காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த தொடர் போராட்டம் விவசாயிகள் பெரும் சவாலாக உள்ளது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை.

What do you think?

திருத்துறைப்பூண்டியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி