in

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு செஞ்சி வார சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்


Watch – YouTube Click

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு செஞ்சி வார சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

 

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு செஞ்சி வார சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம். 6 கோடி விற்பனை என தகவல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையானது வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் எதிர்வரும் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு ஆடு மற்றும் மாடுகளை வாங்க ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் வியாபாரிகள் செஞ்சி பகுதிக்கு வருகை புரிந்ததால் செஞ்சி பகுதி மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும் சந்தையில் ஆடுகள் விற்பனை ஒரு ஆட்டின் விலை 4000 முதல் 35 ஆயிரம் வரை விற்பனையானது.

இதில் வெள்ளாடு, செம்மறி ஆடு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகளும் மாடுகள் 10 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை ஒரு மாட்டின் விலை விற்பனையானது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள் வளர்த்தெடுத்த கால்நடைகளை அதிக விலை போகும் என்பதால் அதிகளவு கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

மேலும் செஞ்சி சுற்றியுள்ள மலைப்பகுதியாக இருப்பதால் இங்கு இயற்கையான முறையில் வளர்ந்து வரும் செடி கொடி தழைகளை மேய்ந்து வளர்க்கப்படும் ஆடுகள் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பதால் ஆடுகளை வாங்க தமிழகம் மற்றும் பிற மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற பகுதியில் இருந்து வியாபாரிகள் அதிகளவு வருவதால் ஆடுகள் விற்பனை அமோகமாக விற்பனையானது

இதனால் சுமார் 6 கோடி அளவிற்கு ஆடுகள் மற்றும் மாடுகளின் விற்பனை பரப்பரப்புன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

நிறுத்தாமல் செல்லும் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம்

மகாராஜா ( Maharaja) Cast and Crew