அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம்
தென்காசிக்கு ஓ.பன்னீர்செல்வம் வருகையை ஒட்டி அவரை வரவேற்கும் விதமாக ஆதரவாளர்கள் அதிமுக பெயரை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு – ஆலோசனைக் கூட்டத்திற்கு தடை கோரியும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி குற்றாலம் காவல் நிலையத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார்
தென்காசி மாவட்டம் இலஞ்சி தனியார் மண்டபத்தில் இன்று மாலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இதையொட்டி ஓ.பன்னீர்செல்வம் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில் அவரை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்கள் விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர்.
இதில் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் என்ற பெயரை பயன்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் குற்றாலம் காவல் நிலையத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு சிவக்குமார் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த புகார் மனுவில் ஓ.பன்னீர்செல்வம் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் கொடி, பெயர் மற்றும் சின்னங்களை பயன்படுத்தக் கூடாது பயன்படுத்தக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து உள்ள நிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் மண்டபத்தை ஒட்டியுள்ள சாலைகள் மற்றும் நாளிதழ்களில் அதிமுக பெயர்களை பயன்படுத்தி சட்ட விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே தென்காசியில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தை கூட்டத்திற்கு தடை கோரியும், அதிமுக பெயர்களை பயன்படுத்தியவர்கள் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனு அளித்ததாக தெரிவித்தனர்.