திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர பிரச்சாரம்
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. அந்த வகையில்
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் கருப்பையா போட்டியிடுகிறார்.
தற்பொழுது அவர் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து, தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலை திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் முன்பு தனது பிரச்சாரத்தை துவங்கினார். இந்த பிரச்சாரமானது திருச்சி மலைக்கோட்டை பகுதியை சுற்றியுள்ள ஆண்டாள் வீதி, மேல புலிவார்டு சாலை, சஞ்சீவி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கினை சேகரித்தார்.
இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் கொண்டு வர, விலையில்லா மிதிவண்டி திட்டம் கொண்டு வர, சொத்து வரி குறைய இரட்டை இலை சின்னத்திற்கு மக்கள் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என வேட்பாளர் கருப்பையா பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பரஞ்சோதி, வளர்மதி, உள்பட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர் கருப்பையாவிற்கு வாக்கு சேகரித்தனர்.