in

ஆடி வெள்ளியை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் கோவிலில் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த மாரியம்மன்

ஆடி வெள்ளியை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் கோவிலில் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த மாரியம்மன் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக இருந்து வரக்கூடிய வேளையில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வேண்டி வரக்கூடிய வேளையில்
ஆடி மாதத்தின் முதலாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உபய கோவிலான அருள்மிகு மாரியம்மன் கோவிலில்
சர்வ அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்
உற்சவருக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை நீண்ட வரிசையில் காலை முதலாகவே காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்

பெண்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் கோவில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தும்

நெய்விளக்கு மாவிளக்கு உள்ளிட்டவைகளை படைத்து அம்மனை மனம் உருக வேண்டி வருகின்றனர்

அதேபோல கோவில் வளாகத்தில் இருக்கக்கூடிய நாகம்மா சிலைக்கு பக்தர்கள் பாலபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமம் உள்ளிட்டவைகளை படைத்து வணங்கி வருகின்றனர்

பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் விறகு அடுப்பில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கி வருகின்றனர்

மதுரையின் மையப்பகுதியாக இருக்கக்கூடிய இந்த மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மதுரை மட்டுமல்லாது அருகில் இருக்கக்கூடிய நகர் பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காலை முதலாகவே திரண்டு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்
பக்தர்களுக்கு அம்மனின் பிரசாதமாக கோவில் நிர்வாகம் மூலம் கேழ்வரகு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது

What do you think?

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ பிள்ளை வயல் காளியம்மன் திருக்கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனை

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களின் சைகை மொழியை சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலங்கள்