ஜெ ஜெயலலிதா 77வது பிறந்தநாள் முன்னிட்டு அதிமுகவினர் மலர் மாலை அணிவித்து மரியாதை
நாகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா 77வது பிறந்தநாள் முன்னிட்டு நாகையில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரி திடலில் அதிமுக நகர கழக சார்பில் நகர செயலாளர் தங்க கதிரவன் தலைமையில் அதிமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து பூக்கள் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.