in

சிதம்பரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

 

சிதம்பரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம். பெண்களை இழிவாகப் பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து நடந்தது. எம்எல்ஏ பாண்டியன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு.

பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து சிதம்பரத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ. பாண்டியன் தலைமை தாங்கினார்.

இதில் ஏராளமானோர் பங்கேற்று அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், அதிமுக அமைப்புச் செயலாளர் முருகுமாறன், எம்.எல்.ஏ கே.ஏ.பாண்டியன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

What do you think?

வீட்டின் பூட்டை உடைக்காமல் 58 பவுன் நகைகள் கொள்ளை

திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா