in

அதிமுக கட்சி வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்


Watch – YouTube Click

அதிமுக கட்சி வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

 

கரூர் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சி வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது வேட்பாளர் தங்கவேலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்மங்கலம், n.புதூர், செவ்வந்திபாளையம், கடம்பன்குறிச்சி, சிவியாம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்பொழுது பேசிய முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சாராயம் மாநிலமாக மாறிவிட்டது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறுகிறது கையால் ஆகாத முதல்வர் அதை கட்டுப்படுத்த தவறி விட்டார்.

மதுபானங்களை கள்ளத்தனமாக இரு சக்கர வாகனம் மூலமாக ஆங்காங்கே மதுபானங்களை சாக்கில் வைத்துக்கொண்டு கரை வேஷ்டி கட்டிய திமுகவினர் விற்பனை செய்து வருகின்றனர்.

மொபைல் டாஸ்மாக்காக திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் மொபைல் டாஸ்மார்க் ஏஜென்ட் எடுத்துள்ளனர் இதை கட்டுப்படுத்த தவறிய கையாலாகாத காவல்துறை என்றார்.


Watch – YouTube Click

What do you think?

காங்கிரஸ் கட்சியை முடக்குவதன் மூலம் எளிதாக வென்று விடலாம், என்பது பா.ஜ., கட்சியின் யுக்தி

தனியார் விடுதியில் கோடிக்கணக்கில் பணம்? – போலீசார் அதிரடி சோதனை