in

பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாள் காரைக்காலில் அதிமுகவினர் அஞ்சலி

பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாள் காரைக்காலில் அதிமுகவினர் அஞ்சலி

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அஇஅதிமுக காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.வி.ஓமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான அஇஅதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

What do you think?

வெளிப்பட்டணம் ஸ்ரீ சக்தி பகவதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா Sri Shakti Bhagavathy Amman Temple Kumbabhishekam Ceremony, Velipattanam