அதிமுக ஆர்ப்பாட்டத்தில் மின்வெட்டு சாலை மறியலால் பரபரப்பு
மதுராந்தகம் அருகே அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறி சாலை மறியல்
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூனாம்பேடு பஜார் பகுதியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் மகன் வீட்டில் பணிபுரிந்த பெண்ணை துன்புறுத்தியவர்கள் அனைவரும் கைது செய்ய வேண்டும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டமும் மற்றும்
செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓங்கூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கால் சூனாம்பேடு பகுதியில் விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்பட்டது.
அதற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்பொழுது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதிமுகவினர் சித்தாமூர் சூனாம்பேடு செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியல் கைவிட்டனர்.