in

மின் கட்டணத்தை கண்டித்து அதிமுகவினர் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மின் கட்டணத்தை கண்டித்து அதிமுகவினர் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

 

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை கண்டித்து அதிமுகவினர் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

போராட்டத்தின் காரணமாக மின்துறை அலுவலக நுழைவாயில் பூட்டு போட்டு பூட்டப்பட்டது இதனால் கேட்டின் மீது ஏறி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு

புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.25 என இருந்த கட்டணம் 2.70 ஆகவும் 101 முதல் 200 வரை ரூ.3.25 ஆக இருந்ததை 4 ரூபாயாக உயர்த்தியும், 201 முதல் 300 வரை ரூ.5.40 ஆக இருந்த பின் கட்டணம் 6 ரூபாயாகவும் 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு கட்டணம் ரூ.6.80ல் இருந்து 7.50 ஆக உயர்த்தப்பட்டது.

இந்த கட்டணம் உயர்வு ஜூன் 16 ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மின்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி மாநில அதிமுகவினர் உப்பளம் மின் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

அதிமுகவினரின் போராட்டத்தின் காரணமாக மின் துறை தலைமை அலுவலகத்தின் நுழைவாயில் உள் பக்கமாக பூட்டு போட்டு பூட்டப்பட்டது. இதன் அடுத்து நுழைவாயிலின் மீது ஏறி அதிமுகவினர் கோஷங்களை எழுப்பியதால் மின்துறை அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸ் யாரும் ஈடுபடுத்தப்பட்டனர். இதேபோன்று உயர்த்தப்பட்ட மின் கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு உள்ளிட்ட சமூக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டம் குறித்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறும்போது. புதுச்சேரியில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின் கட்டணத்தை நூறு யூனிட் வரை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் உடனடியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் இல்லை என்றால் மாநிலத் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.

What do you think?

மூன்று புதிய சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (28.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News