in

மின் கட்டண உயர்வை கண்டித்து நாகையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் பட்ஜெட்டால் அடித்தட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை முன்னாள் அமைச்சர் ஒ எஸ் மணியன் விமர்சனம்

மின் கட்டண உயர்வை கண்டித்து நாகையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டால் அடித்தட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை முன்னாள் அமைச்சர் ஒ எஸ் மணியன் விமர்சனம்

பேட்டி: ஓ எஸ் மணியன் முன்னாள் அமைச்சர்

தமிழகத்தில் தி.மு.க. அரசு 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அதன்படி நாகை அபிராமி அம்மன் திடலில் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்களை தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும், காய்கறி, மளிகை, கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சொத்து, வீட்டு, குடிநீர் வரிகளின் உயர்வை குறைக்க வேண்டும். சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்,

தொடர்ந்து பேசிய அதிமுக கழக அமைப்பு செயலாளர் ஓ எஸ் மணியன் மாற்றத்தை கொண்டு வருவோம் என கூறும் பிரதமர் மோடி எந்த திருத்தத்தையும் கொண்டு வராமல் வழக்கமாக படிக்கிற நிதி செலவின பட்டியலை மட்டுமே அறிவித்துள்ளார், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதும் தாராளமாக நிதி அளிக்கவில்லை, தமிழ்நாடு பொதுவாகவே புறக்கணிக்கப்படுகிறது, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டால் அடித்தட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை என விமர்சித்தார்.

What do you think?

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு பல் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம் அமைச்சர் ரகுபதி ஆவேசம்