in

தனியார் மருத்துவ கல்லூரியில் 50% இடம் ஒதுக்கீடு பெறாத அரை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தனியார் மருத்துவ கல்லூரியில் 50% இடம் ஒதுக்கீடு பெறாத அரை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

 

மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கோட் மற்றும் ஸ்டெட்ஸ்கோப் அணிந்து போராட்டத்தில் பங்கேற்பு

புதுச்சேரியில் தேசிய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தலின்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை இதுநாள் வரையிலும் பெறாத புதுச்சேரி மாநில அரசைக் கண்டித்தும், இந்த ஆண்டில் இருந்து 50 சதவீத மருத்துவ இடங்களைப் பெற வலியுறுத்தியும்,தமிழகம் போன்று, அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள மாணவர்கள், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளியின் இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும்,பாஜக என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்…

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன் புதுச்சேரியை ஆளும் எந்த அரசாக இருந்தாலும் மருத்துவ கல்வியில் அரசின் இடஒதுக்கீட்டை பெறுவதில் வியாபார நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்ற அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களிலும் 50 சதவீத இடங்களை பொருவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு வெற்றி பெற்றவுடன் 50 சதவீத இடங்களுக்கு பதிலாக குறைந்த அளவில் அரசு இடங்களை ஆட்சியாளர்கள் பெற்று வருகின்றனர் என்றும் கடந்த 2019-ம் ஆண்டில் மத்திய மருத்துவ கவுன்சில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 சதவீத இடங்களுக்கு அரசு நிர்ணயம் செய்யும் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் என ஆணையிட்டது.

ஆனால் இதையும் அரசு செய்ய முன்வரவில்லை, மூன்று மருத்துவ கல்லூரிகளிலும் மொத்தம் 650 இடங்கள் உள்ளன. தேசிய மருத்துவ கவுன்சில் ஆணைப்படி 50 சதவீத 325 இடங்களை அரசு பெற வேண்டும். ஆண்டுதோறும் மனம் போன போக்கில் தனியார் மருத்துவ கல்லூரிகள் 30 சதவீதம், 32 சதவீதம், 35 சதவீதம் என நமக்கு பிச்சை போடுவது போல் வழங்குகிறார்கள்.

கடந்த ஆண்டு 239 இடங்கள் சுமார் 36 சதவீதம் மட்டும் அரசின் இடஒதுக்கீடாக அரசு தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் இருந்து மன்றாடி பெற்றது. 50 சதவீதம் பெற உரிய சட்டம் இயற்றாமல் ஆண்டுதோறும் கட்டப்பஞ்சாயத்து பேசுவது போல் தனியார் மருத்துவ உரிமையாளர்களிடம் அரசு பேரம் பேச வேண்டிய அவசியம் என்ன?,என கேள்வி எழுப்பினார்…

புதியதாக துணைநிலை ஆளுநர் தனது நிர்வாகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துபவராக இருப்பார் என நம்புகிறோம். இவ்வாண்டு தனியார் மருத்துவ கல்லூரியில் 50 சதவீத இடங்களை அரசின் இடங்களாக பெற அதிமுக சார்பில் தலைமை கழகத்தின் அனுமதி பெற்று துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கப்படும். இதன் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை புதுச்சேரியில் நடத்தும் என எச்சரிக்கை தெரிவித்தார்.

What do you think?

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடம் பெறாததை கண்டித்து திமுக -காங். வெளிநடப்பு

கடவுளை சந்தித்து விட்டேன்.. ரிஷப் ஷெட்டி