புதுச்சேரி மக்களவை தேர்தல் பணியை அதிமுக துவங்கியது…
புதுச்சேரி மக்களவை தேர்தலில் அதிமுக போட்டியிட இருப்பதையொட்டி இரட்டை இலை சின்னம் வரையும் பணியை மாநில செயலாளர் அன்பழகன் துவக்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை தேர்தல் பணியை அதிமுக இன்று துவங்கி விட்டது..நாளை முதல் அனுமதி பெற்று வீடுகளில் இரட்டை இலை சின்னம் வரையப்படும் என பதிலளித்தார்.
அறிவித்த எந்த வாக்குறுதியையும் காங் எம்பி நிறைவேற்றவில்லை..நிச்சயமாக தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என அன்பழகன், எய்ம்ஸ் கட்டி விட்டால் தனியார் மருத்துவ நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்ற குறுகிய நோக்கில் தமிழக திமுக அரசு எய்ம்ஸூக்கு அழுத்தம் தரவில்லை.
தமிழகத்திற்கு பிரதமர் வந்த போதும் கூட வலியுறுத்தவில்லை என அன்பழகன் குற்றச்சாட்டு…