in

அருந்ததிபுரம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தக பை, நோட் புக், பென்சில் அதிமுக மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன் வழங்கினார்

அரியாங்குப்பம் தொகுதி அருந்ததிபுரம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தக பை, நோட் புக், பென்சில் ஆகிய கல்வி உபகரணங்களை அதிமுக மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன் வழங்கினார்.

அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அருந்ததிபுரம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தக பை, நோட் புக், பென்சில் ஆகிய கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி பொறுப்பாசிரியர் சுந்தரமூர்த்தி வரவேற்பு உரை வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக அஇஅதிமுக மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன் கலந்துகொண்டு தனது சொந்த செலவில் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.

மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டு ரவி பாண்டுரங்கன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்வின் இறுதியாக ஆசிரியர் சுதா நன்றி உரை நிகழ்த்தினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர் பழனி ராஜா செய்திருந்தார். இந்நிகழ்வில் தொகுதி கழக செயலாளர் ராஜா, வார்டு கழக செயலாளர் ஜெயக்குமார், அதிமுக பிரமுகர்கள் ஜீவா, சிவா, நாகராஜ் ஆகியோர் உடன் இருந்தார்கள்

What do you think?

புதுச்சேரி அரசை மோடி அரசாங்கம் புறக்கணிப்பதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்

புதுச்சேரியில் மீண்டும் ரேஷன் கார்டுகளுக்கு அரிசி வழங்கப்படும் ரங்கசாமி அறிவிப்பு