அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தீவிர பிரச்சாரம்
புதுச்சேரி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளராக தமிழ் வேந்தன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பல்வேறு தொகுதிகளில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்..
அதேபோல் இன்று முதலமைச்சர் ரங்கசாமி தொகுதியான தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் அப்பொழுது மாநில செயலாளர் அன்பழகன் பேசும்பொழுது….
இந்த தொகுதியை பொறுத்தமட்டில் முதலமைச்சரை அவ்வப்போது தேர்ந்தெடுக்கும் நட்சத்திர தொகுதியாகும். ஆனாலும் இந்த தொகுதியில் இந்த மூன்று ஆண்டுகளில் எந்த இளைஞருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி தரவில்லை. மாறாக இந்த தொகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.
அந்த தொழிற்பேட்டையில் இரவு நேரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை தடையின்றி நடத்தப்படுகின்றது. இத்தொகுதியில் மினி பஸ் நிலையம் கொண்டுவரப்படும் என அறிவித்து இன்றுவரை அதற்கான எந்த வேலைகளையும் நடைபெறவில்லை.
தமிழக திமுக முதலமைச்சர் இங்கு வந்து பேசும் போது புதுச்சேரி முதலமைச்சர் உயரமானவர். ஆனால் அவருக்கு அறிவு இல்லை. தன்மானம் இல்லை. அடிமை போல் செயல்படுகின்றார் என தரம் தாழ்ந்து நமது முதலமைச்சரை பேசியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதனை என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களோ, பாஜகவின் வெற்றிக்காக உழைக்கும் பாஜகவை சேர்ந்தவர்களோ கண்டிக்காத நிலையில் சந்தர்ப்பவாத அரசியலுக்கு எடுத்துக்காட்டான ஒன்றாகும். யாரு எக்கேடு கெட்டு போனாலும் எனக்கென்ன? யார் யாரை கலங்கப்படுத்தினாலும் எங்களுக்கு என்ன? என செயல்படும் பாஜகவுக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடத் புகட்ட வேண்டும் என தெரிவித்தார்…
பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தின் சொத்து பட்டியல் 32 கோடி என தாக்கல் செய்துள்ளார் ஆனால் பல நூறு கோடி சொந்தக்காரராக தான் அவர் உள்ளார்.. நமச்சிவாயம் தேர்தலில் வெற்றி பெற்றால் தட்டஞ்சாவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரங்கசாமியின் பதவி தூக்கி எறியப்படுவார்….
முதலமைச்சருக்கு அரசியல் என்னவென்று எதுவும் தெரியாது அவர் கள்ளிப்பால் எது நல்ல பால் எது என்று தெரியாதவர்… நமச்சிவாயம் நல்ல பால் என்று எண்ணி தண்ணி ஊற்றி வளர்த்து வருகிறார் அந்த மாட்டை… ஆனால் அது ஒரு கள்ளிச்செடி, இது வளர்ந்தால் முதலமைச்சர் ரங்கசாமி ஒரே மாதத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் கூறினார்…