அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பரபரப்பு பேட்டி
தேசிய ஜனநாயக கூட்டணியில் ரங்கசாமியை இரண்டு முறை முதலமைச்சர் ஆக்கியது அதிமுக தான் இதை மனதில் வைத்துக் கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ரங்கசாமி அதிமுகவை ஆதரிக்க வேண்டும் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பரபரப்பு பேட்டி
ஜெயலலிதா எம்ஜிஆர் படங்களை போஸ்டரில் அச்சடித்து பாஜக வாக்கு சேகரிப்பது மலிவு விளம்பரம் எனவும் கண்டனம்
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்
இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த பிறகு தமிழகத்திற்கு வருகை புரிந்த பிரதமர் மோடி வேறு வழி இல்லாமல் எங்களது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்.
அதையே தனது தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு புதுச்சேரியில் உள்ள பாஜகவினர் மோடி பேசிய வாசகத்தை பிரசுரித்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களை அச்சிட்ட போஸ்டர்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் என்று விளம்பரம் செய்து வருகிறார்கள் இது தவறான அணுகுமுறையாகும் என்று குற்றஞ்சாட்டினார்.
ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் படங்களை அச்சிட்டு வாக்கு சேகரித்து மலிவு விளம்பரம் தேடும் புதுச்சேரி பாஜகவின் செயலை வன்மையாக கண்டிப்பதோடு இதுபோன்ற மலிவு விளம்பரங்களை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்தார்.
புதுச்சேரியை பாஜக ,என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜகவிற்கு தான் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்த பிறகு யாரும் போட்டியிட முன் வராதது பாஜகவின் பலவீனத்தை காட்டுவதாக விமர்சனம் செய்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்தபோது ரங்கசாமியை இரண்டு முறை முதலமைச்சர் ஆக்கியது அதிமுக தான், எனவே இதை மனதில் வைத்துக்கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரங்கசாமி அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்று அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
முதலமைச்சர் ரங்கசாமி உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நியமன எம்எல்ஏக்கள் மற்றும் ராஜ்யசபா எம்.பியை பாஜக தட்டி பறித்துக் கொண்டதாக அன்பழகன் குற்றம் சாட்டினார்.