பாதிக்க பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் நிதி மற்றும் பிரட் பழங்கள் கொடுத்து உதவி
விஷ சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்க பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் நிதி மற்றும் பிரட் பழங்கள் கொடுத்து உதவி
கள்ளக்குறிச்சியில் விஷ சாராய உயிரிழப்பிற்கு காரணமான மெத்தனால் புதுச்சேரியில் இருந்து கடத்துவரப்பட்டது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய நிலையில் இதற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மௌனம் காக்காமல் விளக்கம் அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில அதிமுக வலியுறுத்தியுள்ளது
கள்ளக்குறிச்சியில் கள்ள விஷ சாராயம் குடித்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தற்போது 17 நபர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் ஜிப்மர் மருத்தவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிதியுதவி மற்றும் பிரட், பழங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்கள்.
மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து உயர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் போது, புதுச்சேரியில் இருந்து எத்தனால் கடத்தி வரப்பட்டதாக கூறியுள்ளார். புதுச்சேரியில் இருந்து எத்தனால் கடத்தி செல்லப்பட்டதா என முதலமைச்சர் ரங்கசாமி பதிலளிக்க வேண்டும்.
இது சம்பந்தமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் புதுச்சேரிக்கு வருகை தந்த போது புதுச்சேரியில் இருந்து எத்தனால் கடத்தப்படவில்லை. புதுச்சேரியில் இருந்து எத்தனால் கடத்தப்பட்டதாக எங்களது முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிக்கவில்லை என்று ஒரு பொய் தகவலை கூறியுள்ளார்.
தமழக முதலமைச்சர் கூறிய கருத்தையே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மறுத்திருப்பது உண்மையை திசை திருப்பும் செயலாக உள்ளது என்று தெரிவித்தார்.
கள்ள சாராய பிரச்சினையில் பிரச்சனையில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி என பல்வேற மாநிலங்கள் சம்பந்தப்பட்டு உள்ளதால் தமிழக காவல்துறையினர் விசாரித்தால் உண்மைகள் மறைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே 3 மாநிலங்கள் சம்பந்தபட்ட இந்த பிரச்சனையை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர்.