in

சிறையில் தீயாக பரவும் எய்ட்ஸ்


Watch – YouTube Click

சிறையில் தீயாக பரவும் எய்ட்ஸ்

லக்னோ மாவட்ட சிறையில் ஏற்கனவே 27 பேருக்கு எச்.ஐ.வி (HIV) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த டிசம்பரில் எடுத்த பரிசோதனையை அடுத்து மேலும் 36 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில், உத்தரபிரதேச மாநில சுகாதாரத் துறையால் நடத்தப்பட்ட பரிசோதனையை தொடர்ந்து நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

செப்டம்பரிலிருந்து எச்.ஐ.வி பரிசோதனைக் கருவிகள் கிடைக்காததே சோதனை தாமதமானதற்குக் காரணமாக அமைந்தது. பாதிக்கப்பட்ட கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அவர்கள் சிறைக்கு வருவதற்கு முன்பு, பலர் பயன்படுத்திய ஊசிகளைப் பயன்படுத்தியதால் இந்த நோய்க்கு ஆளாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எனினும், சிறைக்குள் வந்த பிறகு எந்தவொரு கைதிக்கும் எச்.ஐ.வி தொற்று ஏற்படவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சிறை நிர்வாகம் விழிப்புடன், பாதிக்கப்பட்ட கைதிகளின் உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் எச்.ஐ.வி தொற்று காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

அடங்காமல் வாடி வாசலில் நின்ற காளை அமைதியாக அழைத்து சென்ற உரிமையாளர்

தேமுதிக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை