திண்டிவனம் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி
திண்டிவனம் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மூங்கிலம்மன் கோயில் தெருவில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவிலில் ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு பால் தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் திராட்சை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலச நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு பஞ்சமுக தீபாரதனை, மற்றும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திண்டிவனம் நகர்மன்ற தலைவர் திருமதி நிர்மலா ரவிச்சந்திரன் குடும்பத்தினர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.