in ,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மேலத்துலுக்கன் குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் ஐப்பசி மாத பொங்கல் திருவிழா

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மேலத்துலுக்கன் குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் ஐப்பசி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மேலத்துலுக்கன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் ஐப்பசி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

முன்னதாக காளியம்மனுக்கு மஞ்சள், அரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், குங்குமம்,தேன், கரும்புச்சாறு, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரத்தில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட காளியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

What do you think?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராக்காச்சி அம்மன் கோயிலில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 150 பேர் மீட்பு

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா முன்னிட்டு காப்பு கட்டுதல் வைபவம்