in

ரம்ஜான் நோன்பின் போது விமான பயண தடை


Watch – YouTube Click

ரம்ஜான் நோன்பின் போது விமான பயண தடை

ரம்ஜான் நோன்பு இருக்கும் போது விமானத்தில் பறக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதுமே நோன்பிருந்து ரம்ஜான் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு, நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மருத்துவ பரிந்துரையின்படி ரம்ஜான் மாதம் முழுவதும் பயணங்களின் போது, குறிப்பாக விமானத்தில் பயணிக்கும் பொழுது, விரதத்தை தவிர்க்குமாறு பாகிஸ்தானின் தேசிய விமான சேவை நிறுவனம் அதன் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, நோன்பின் போது பறப்பது அவர்களின் உயிருக்கு மட்டுமல்ல, மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று கூறுகிறது.

அதாவது, ஒரு நபர் விரதத்தைக் கடைப்பிடிக்கும்போது நீர்ப்போக்கு, சோம்பல் மற்றும் தூக்கத்தை எதிர்கொள்கிறார் என்றும், அத்தகைய சந்தர்ப்பத்தில், அபாயத்தின் உறுப்பு கணிசமானதாகவும், பாதுகாப்பின் விளிம்பு குறைவாகவும் இருக்கும் என்றும் மருத்துவ பரிந்துரை கூறுகிறது.

இந்த மருத்துவ பரிந்துரைகளை மேற்கோள் காட்டி, சர்வதேச அல்லது உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பொழுது நோன்பு இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

மம்தாவுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட 2 நபர்களை கைது