in

திருநள்ளாறில் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

திருநள்ளாறில் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

 

திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் மகளும் திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் இன்று சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் மகளும் திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

அப்பொழுது ஆலயத்தில் விநாயகர், தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பாள், சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் மற்றும் சிறுவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

What do you think?

திமிதி திருவிழாவில் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்த திரௌபதி அம்மன்

எந்த நேரத்திலும் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்