in

மகிழ் திருமேனியை அழவைக்கும் அஜீத் மற்றும் த்ரிஷா..நொந்து போன லைக்கா

மகிழ் திருமேனியை அழவைக்கும் அஜீத் மற்றும் த்ரிஷா..நொந்து போன லைக்கா

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் அஜித்தின் விடாமுயற்சி சூட்டிங் பல்வேறு காரணங்களால் கால தாமதமானது ஒரு வழியாக அஜர் பைஜான் முழுமூச்சாக ஷெட்யூலை முடித்துவிட்டு அடுத்து துபாயில் ஷூட்டிங் நடக்கலாம் என்று திட்டமிட்டனர்.

ஆனால் அதிக குளிரின் காரணமாக அங்கிருந்து முட்டையை கட்டிய பட குழுவினர் துபாய் சென்று படப்பிடிப்பை நடத்தலாம் என்று நினைத்தபோது அதற்கும் ஆப்பு வைத்தார் திரிஷா.

ஏனென்றால் ஏற்கனவே அவர் மற்ற படங்களுக்கு கால்ஷீட் கொடுத்த காரணத்தால் விடாமுயற்சியில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் சூட்டிங் தாமதமான நிலையில் தற்பொழுது அஜர் பைஜானில் சீசன் மாறிவிட்டதால் மீண்டும் அங்கேயே ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என்று பட குழுவினர் யோசித்து வருகிறார்களாம்.

அதற்கான அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று அறிவித்துள்ளனர். 70% ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் விரைவில் இந்த படத்திற்கான ஷூட்டிங்கை முடித்துவிட்டு நடிகர் அஜித் அவர்கள் தனது அடுத்த படமான ஏகே 63 யில் இணைய உள்ளார்.

இந்த படத்தின் சூட்டிங் மார்ச் மாதம் துவங்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ஆனால் விடாமுயற்சியின் சூட்டிங் விடாமல் அஜித்தை துரத்திக் கொண்டிருப்பதால் ஏ கே 63 படத்தின் சூட்டிங் தொடங்குவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.

இப்படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் நிறைவு செய்துள்ள பட குழுவினர் எப்பொழுது விடாமுயற்சி டீம் அஜித்தை இந்த பக்கம் அனுப்புவார்கள் என்று டென்ஷனில் இருக்கிறதாம் ஏ கே 63 crew.

இயக்குனர் மகிழ் திருமேனி தான் இதற்கு ஒரு சொல்யூஷனை கொடுக்க வேண்டும். படத்தை மே மாதம் ரிலீஸ் பண்ணுவாரா மகிழ் திருமேனி
அல்லது பிறந்தநாளை மட்டும் தான் கொண்டாடுவாரா அஜித்.

What do you think?

பாஜக எம்எல்ஏக்கள் 15 பேர் சஸ்பெண்ட்

தேக்வாண்டோ போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நிரோஷா பேட்டி