விடாமுயற்சியை விடாம துரத்தும் பிரச்சனை
பொங்கலுக்கு விடா முயற்சி படம் ரிலீஸ் ஆகி அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தணிக்கை குழுவில் போட்ட கட்…டால், படத்தில் சில மாற்றங்கள் செய்துவருவதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் விடாமுயற்சி படம் திருத்தம் செய்யப்பட்டு தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டு U/A சான்றிதழ் சென்சார் போர்டு கொடுத்த நிலையில் படம் எப்பொழுது வரும் என்று ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர்.
படம் ரிலீஸ் செய்வதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தையில் தற்பொழுது ஈடுபட்டு இருப்பதால் படத்தை எப்படியும் இந்த மாதம் இறுதியில் ரிலீஸ் செய்ய படகுழு திட்டமிட்டு இருக்கிறது.
இந்த மாதம் விடாமுயற்சியின் ரிலீஸ் கன்பார்ம் என்று ரசிகர்கள் நம்பிவிட வேண்டாம். கடைசி நேர மாறுதலுக்கு உட்படலாம்.