நடிகர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் குதிக்கும் அகரம் நடிகர்
நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்தாலும் ஆரம்பித்தால் மற்ற நடிகர்களுக்கும் அரசியல் ஆர்வம் வந்துவிட்டது.
நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் குதிப்பதற்கு முன் நாம ஒரு கட்சியாவது ஆரம்பித்து விடனும் சொல்லிட்டு நடிகர் ஒருத்தர் திரை மறைவில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.
வேற யாரும் இல்லை நம்ப சர்ச்சை சார் விஷால் தான் இவரைத் தொடர்ந்து இன்னொரு நடிகரும் அரசியலில் நுழைவதற்கான சில ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளது.
இந்த நடிகர் அகரம் என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து பல ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
மேலும் பல்வேறு ஊர்களில் ரசிகர் மன்றங்களை ஆரம்பித்து பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.
நடிகர் சூர்யா தனது பெயரில் இயங்கும் நற்பணி மன்றங்களை வலுப்படுத்துவதற்காக திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறார்.
அதாவது எந்த நற்பணி மன்ற ரசிகர்கள் சிறந்த முறையில் சேவை செய்கிறார்களே அந்த ரசிகரை தேர்வு செய்து நிர்வாகிகளாக நியமிக்கப்பட உள்ளார்.
தற்பொழுது புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, காரைக்கால் நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர் மன்றத்தை எப்படி ஸ்ட்ராங்காக செயல்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறதாம்.
இவரின் சூறாவளி பயணத்தை பார்த்தால் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாக இருக்கிறது என்று சூர்யாவின் நெருங்கிய வட்டாரம் முனுமுனுக்கிறதாம்.