திருமலையில் கோ பூஜை செய்தார் ஆகாஷ் அம்பானி
திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டு திருமலையில் கோ பூஜை செய்தார் ஆகாஷ் அம்பானி.
ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி ஏழுமலையான் தரிசனத்திற்காக இன்று மும்பையில் இருந்து சிறப்பு விமான மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் இருந்து திருமலைக்கு காரில் சென்ற அவர் சற்று நேரம் ஓய்வுக்கு பின் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி கும்பிட்டார்.
தொடர்ந்து அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
தொடர்ந்து திருமலையில் உள்ள கோசாலைக்கு சென்று கோபூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார் ஆகாஷ் அம்பானி.