in

அகில் அக்கினேனி, ஜைனப் திருமணம் விரைவில்

அகில் அக்கினேனி, ஜைனப் திருமணம் விரைவில்

 

தெலுகு நடிகர் நாகார்ஜுனா அமலா..வின் மகன் அகில் அக்கினேனிக்கும், ஜைனப் ராவ்ஜிக்கும் இடையேயான திருமணம் மார்ச் 24, 2025 அன்று நடைபெற உள்ளது.

இந்த ஜோடி,.. நவம்பர் 26, 2024 அன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர் . அகில் மற்றும் ஜைனப் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர்.

ஆனால் இவர்களின் நிச்சயதார்த்தம் ரகசியமாக நடத்தப்பட்டது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, நாகார்ஜுனா தனது X தளத்தில் செய்தியைப் பகிர்ந்து கொண்ட பிறகு தான் வெளிஉலகிற்கு தெரியவந்தது.

திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெறுகிறது, அக்கினேனி குடும்பத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாதலால்.

அகிலின் மூத்த சகோதரர் நாக சைதன்யாவின் திருமணமும் இங்கு தான் நடைபெற்றது. திருமண ஏற்பாடுகள் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக ஏற்பட செய்யப்பட்டு வருகிறது . திருமணத்திற்கு பிறகு ஹைதராபாத்தில் வரவேற்பு நடத்தப்படும்.

What do you think?

விஜய் பங்கேற்றால் அவர் கட்சிக்கு கேடு ஏற்படும் – மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ சாத்தூரில் பேட்டி

சினிமாவை விட்டு விலகினால் சந்தோஷம்… ராஷ்மிகா