in

கும்பகோணத்தில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநாட்டில் தீர்மானம்

கும்பகோணத்தில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு சார்பில் நடந்த மாநாட்டில் தீர்மானம்…..

மேலும் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது ஆன்மீக சிந்தனை உள்ளது அவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா பாதுகாப்பு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் ஜி பேட்டியளித்தார்.

தொடர்ந்து நடிகர் விஜய் கேரள மக்களின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறும் போது தமிழக மக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவார் என நம்புகிறோம் என்றும் திரைப்படம் நடிகர் மோகன்ஜி பேட்டி…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகா சபா பாதுகாப்பு கோரிக்கை முழக்க மாநாடு இதில் பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் இராம. நிரஞ்சன். ஜி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் ஜி இயக்குனர் மோகன் ஜி சூரியனார் கோவில் ஆதீனம் மற்றும் திருவாரூர் ஸ்ரீ சங்கரநாராயண பீடம் ஸ்ரீ சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையைப் பற்றி சிறப்புரை ஆற்றினர்.

இந்த மாநாட்டில் கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் ராஜராஜ சோழனுக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றும் , தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற ஆகம வல்லுநர் குழுக்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசின் நியமனம் செய்ய வேண்டும் என்றும்,

தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் சுவாமிக்கு செய்யப்படும் நெய்வேதியம் மற்றும் விநியோகிக்கப்படும் பிரசாதங்களில் மாட்டுக் கொழுப்பு மீன் எண்ணெய் போன்ற அசைவங்களை கலப்படம் இல்லாதவாறு தமிழக அரசு உறுதி செய்து தரமான பிரசாதம் கொடுக்க வேண்டும் என்றும்,

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ராஜராஜ சோழனின் சிலையை மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளில் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்

தமிழகம் எங்கும் உள்ள அனைத்து ஆடைகளும் பசு தானத்தால் ஆன விபூதியை பிரசாதமாக வழங்குவதற்கு தமிழக அரசும் இந்து சமய அறநிலைத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

What do you think?

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Vettaiyan – The Hunter