அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி
கரூரில் தொடங்கி அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி பரபரப்பான ஆட்டத்தில் தென்னக ரயில்வே டில்லி அணி வெற்றி பெற்றது.
அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டியும், அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டியும் கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் இன்று தொடங்கியது. போட்டியை கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா துவக்கி வைத்தார். இதில் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கரூரில் 64-ம் ஆண்டாக தொடர்ந்து நடந்து வரும் இன்று தொடங்கிவரை 6 நாட்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறுகிறது. ஆண்களுக்கான போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையிலும், பெண்களுக்கான போட்டிகள் லீக் முறையிலும் நடைபெற உள்ளன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்று விளையாடுகின்றனர்.
இன்றைய முதல் போட்டியில். தென்னக ரயில்வே டில்லி அணியும், சி.ஆர்.பி.எப் டில்லி அணியும் மோதின தொடக்கம் முதலே தென்னக இரயில்வே அணி அதிரடியாக விளையாடினார்கள்.
இதனால ஆட்ட நேர முடிவில் தென்னக இரயில்வே அணி 56-44 என்ற புள்ளி கணக்கில் சி.ஆர்.பி.எப். அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.