அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிரவன் செய்தியாளர் சந்திப்பு
த.வெ.க.தலைவர் விஜயின் நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தை ஆதரிக்கிறோம் என அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிரவன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில செயற்குழு கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாநில பொதுச் செயலாளர் கதிரவன் தலைமை வகித்தார்.
மாநில தலைவர் முத்துராமலிங்கம், மாநில செயலாளர் பசும்பொன் ராஜா, மாவட்ட துணை செயலாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
பின்னர் பொதுச் செயலாளர் கதிரவன் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:
மத்திய அரசு குற்றவியல் நடைமுறை சட்டத்தின் மூலம் சமஸ்கிருதம் ஹிந்தியை திணிப்பதை கடுமையாக எதிர்க்கின்றோம். அந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், வக்கீல்கள் போராட்டத்திற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முழு ஆதரவு தெரிவிக்கின்றது.
தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கு நீட் தேர்வு என்பது தேவையில்லாதது.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நீட் தேர்வு குறித்து தெரிவித்த கருத்தை வரவேற்கின்றோம்.
உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். தற்பொழுது வரை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரை சீட் கொடுப்பதை பொறுத்து அவர்களுடன் கூட்டணி அமையும். 28 மாவட்டங்களில் எங்களுடைய கட்டமைப்பு வலுவாக உள்ளது. அங்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி தேர்தல் பணி நாளை முதல் துவங்க உள்ளோம். கள்ளர் பள்ளிகளை அரசு பள்ளியுடன் இணைப்பது குறித்து நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு யாரிடமும் கருத்து கேட்கவில்லை அவர்களே முடிவு செய்துள்ளனர்.
இந்த அறிக்கையை முதல்வர் ஏற்கக்கூடாது. வருகின்ற 12ஆம் தேதி கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளனர். அதற்கு எங்களது கட்சி முழு ஆதரவு தெரிவிக்கிறது.
என தெரிவித்தார்