in

குண்டாஸ் வழக்கு பதியப்படும் என அறிவித்த காவல்துறையை கண்டித்து அனைத்து சாராயக்கடை உரிமையாளர்களும் உரிமத்தை சரண்டர்

குண்டாஸ் வழக்கு பதியப்படும் என அறிவித்த காவல்துறையை கண்டித்து. அனைத்து சாராயக்கடை உரிமையாளர்களும் உரிமத்தை சரண்டர்.கலால் துணை ஆணையரிடம் கடிதம் கொடுத்ததால் பரபரப்பு.

புதுச்சேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாராயக் கடைகள் அரசு அனுமதியுடன் இயங்கி வருகிறது.மாநில அரசின் சார்பில் சாராயம் மானிய விலையை கொடுக்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.இந்த சாராயம் மொத்தமாக விற்பனை செய்வதாக இருந்த புகார் சம்பந்தமாக மேற்கு பகுதி எஸ்.பி வம்சிதரெட்டி சாராயக்கடை உரிமையாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் அப்போது சரக்கடை உரிமையாளர்களை கூட்டத்தில் நிற்க வைத்து ஆலோசனை நடத்தியதுடன் சாராயம் தமிழகத்துக்கு கடத்தப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இது சாராயக்கடை உரிமையாளர்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது…

இந்த நிலையில் ஒவ்வொரு சாராயக்கடையும் பல லட்சம் மாத வாடகை செலுத்தி பலர் ஏலம் எடுத்து நடத்தி வருகின்றனர். இந்த சாராயக் கடைகளில் இருந்து விற்பனை செய்யப்படும் சாராயம் தமிழகத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அவ்வாறு சாராயம் தமிழகத்தில் பிடிபட்டால் சாராயக்கடை உரிமையாளர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்படும் என எஸ்.பி கூறியதற்கு சாராயக்கடை உரிமையாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்து.புதுச்சேரி உள்ள அனைத்து சாராய வியாபாரிகள். கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் சந்தித்து தங்களுக்கு புதுச்சேரி அரசு வழங்கிய சாராயக்கடை லைசென்ஸ் கடை சரண்டர் செய்தனர். மேலும் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்க மனுவும் அளித்தனர் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துணை ஆணையர் தெரிவித்துள்ளதாக சாராயக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

What do you think?

அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை இதுதான் எங்களின் நிலைபாடு

புதுச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த அனைத்து மீனவர்களும் அப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என புதுச்சேரி அரசு மீன் வளத்துறை அறிவுறுத்தியுள்ளார்கள்