in

கிராம விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

கிராம விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

 

சிதம்பரம் அருகே 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு. சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மனு அளித்ததால் பரபரப்பு. நிவாரணம் வழங்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக எச்சரிக்கை.

கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழை, வெள்ளத்தால் சிதம்பரம் அருகே உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி இருந்தனர். ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.

எனவே உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று விவசாயிகள் சிதம்பரம் சார் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள இளநாங்கூர், செட்டிமேடு, கூத்தங்கோயில், கண்டியாமேடு, அகரநல்லூர், வையூர், பூலாமேடு, சிவாயம், தவர்த்தாம்பட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தமிழ் விவசாய சங்க தலைவர் பெரியசாமி தலைமையில் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டனர். பின்னர் சார் ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் விவசாய சங்க நிர்வாகிகள்,

கடந்த மழை, வெள்ளத்தின்போது சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டது. பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து அனுப்பினார்கள். ஆனால் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.

எங்களது நிலத்திற்கு பக்கத்தில் உள்ள நிலங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் காட்டுமன்னார்கோயில் தாலுகா என கூறுகிறார்கள். பெரிய அளவில் பயிர் பாதிக்கப்பட்ட எங்கள் கிராம விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை. அதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுகுறித்து சார் ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறோம்.. இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் விரைவில் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

What do you think?

சிதம்பரம் பஸ் நிலையத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகை

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப் பெருந்திருவிழா