பிளாப் இயக்குனருடன் கூட்டணியா? நக்கல் பண்ணிய நெட்டிசன்
மகாராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இடையில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலக்கினார். விஜய் சேதுபதி தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்திருக்கிறார் .
படத்தின் பெயர் இன்னும் அறிவிக்காத நிலையில் விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்தில் ஜோடியாக நித்யா மேனன் மற்றும் தீபா சரவணன், ரோஷினி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
தனது அடுத்த ப்ராஜெக்ட்டை தெலுங்கு இயக்குனர்களின் ஒருவரான பூரி ஜெகன்நாத்துடன் கைகோர்த்து இருக்கிறார்.
இந்த அறிவிப்பு இணையத்தில் வெளியானதை பார்த்த ஒருவர் சமீப காலமாக பூரி ஜெகன்நாத் ஹிட் கொடுக்கவில்லை விஜய் சேதுபதி பக்காவா யோசித்து கூட்டணி வைப்பார் என்று பார்த்தால் தோல்வி இயக்குனருடன் இனைந்திருகிறாரே என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
இதற்கு நடிகர் சாந்தனு Tweeter பக்கத்தில் பிறர் குறித்து இதுபோன்ற அவதூரை பரப்ப கூடாது பூரி ஜெகநாதன் பிரபல இயக்குனர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் கூட அவரை இப்படி பேச கூடாது மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.